ரூ.87ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

  தினத்தந்தி
ரூ.87ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னை,தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது. அதன் பின்னர் விலை சற்று குறைந்திருந்தது. 27-ந்தேதியில் இருந்து மீண்டும் விலை எகிறத் தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.86 ஆயிரம் என்ற உச்சத்தையும் தாண்டி விற்பனை ஆனது. அதனை தொடர்ந்து நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 860-க்கும், ஒரு பவுன் ரூ.86 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.இந்த நிலையில், தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.240-ம், கிராமுக்கு ரு.30-ம் அதிகரித்து ஒரு பவுன் ரூ.87,120-க்கும், ஒரு கிராம் ரூ.10,890-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-01.10.2025 ஒரு சவரன் ரூ.87,120 (இன்று)30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880 (நேற்று)29.09.2025 ஒரு சவரன் ரூ.86,16027.09.2025 ஒரு சவரன் ரூ.85,12026.09.2025 ஒரு சவரன் ரூ.84,400

மூலக்கதை