கரூரில் நடந்த விபத்து பெருந்துயர் அளிக்கிறது- நடிகை ஆண்ட்ரியா வருத்தம்

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, ஜி.வி.பிரகாஷ், வடிவேலு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ஆகியோர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கலும் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தாருக்கு அறுதலும் தெரிவித்தனர். இவர்கள் வரிசையில் ஆண்ட்ரியா மற்றும் மாஸ்க் படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். “கரூரில் நடந்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
