தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை!

  தினத்தந்தி
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை!

சென்னை, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்கா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சோனாக்சி சின்கா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். அதாவது, வெங்கட் கல்யாண் இயக்கி வரும் 'ஜடதாரா' படத்தில் ஒரு கவர்ச்சி நடன பெண்மணி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் நவம்பர் 7ம் தேதி தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை