தீபிகா படுகோனை அன்பாலோ செய்தேனா? - சர்ச்சைக்கு இயக்குனர் பரா கான் பதில்

  தினத்தந்தி
தீபிகா படுகோனை அன்பாலோ செய்தேனா?  சர்ச்சைக்கு இயக்குனர் பரா கான் பதில்

மும்பை,பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பிடித்து வருவது தெரிந்ததே. தற்போது அவரது பெயர் மீண்டும் சமூக ஊடகங்களில் கேட்கத் தொடங்கியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான பரா கானும் தீபிகாவும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதாக இணையத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பரா கான், தீபிகாவைப் குறிப்பிட்டு, அவர் இப்போது 8 மணி நேரம் வேலை செய்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு எப்படி வர முடியும்? அவருக்கு எங்கே அவ்வளவு நேரம் இருக்கிறது? என்று கூறினார். பரா கானின் இந்த நகைச்சுவையான வார்த்தைகள் பாலிவுட்டில் விவாதத்திற்கு வழிவகுத்தன. இதனையடுத்து, தீபிகா அவரை அன்பாலோ செய்ததாகவும், அதேபோல், பரா கானும் தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கைப் அன்பாலோ செய்ததாகவும் வதந்தி பரவியது. இந்நிலையில், தீபிகா படுகோனை பின்தொடர்வதை நிறுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் பரா கான் பதிலளித்திருக்கிறார். முதலில், தாங்கள் ஒருவரையொருவர் பின்தொடர்ந்ததே இல்லை என்று பரா கான் கூறி இருக்கிறார். மேலும், தீபிகாவின் மகள் துவா பிறந்தபோது அவரைப் பார்த்த முதல் சிலரில் தானும் ஒருத்தி என்றும் கூறினார். இருவரும் ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பரா கான் ''ஓம் சாந்தி ஓம்'' மற்றும் ''ஹேப்பி நியூ இயர்'' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தீபிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றன. அதிலிருந்து அவர்களின் நட்பு தொடர்கிறது.

மூலக்கதை