திருமணத்திற்கு பிறகு சோபிதா நடிக்கும் படம்...ரசிகர்கள் எதிர்பார்ப்பு

  தினத்தந்தி
திருமணத்திற்கு பிறகு சோபிதா நடிக்கும் படம்...ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை,நடிகை சோபிதா முன்னணி நடிகர் நாக சைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, அவரிடமிருந்து புதிய திரைப்படங்களைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. இருப்பினும் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அது பற்றிய ஒரு சுவாரசியமான விஷயம் வெளிவந்துள்ளது. பிரபல தமிழ் இயக்குனர் பா. ரஞ்சித். இயக்கும் ''வெட்டுவம்'' படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதில் சோபிதா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது படப்பிடிப்பு நிலையில் உள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ''தங்கலான்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கும் படம் இது என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.

மூலக்கதை