அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் திரைப்படங்கள்

  தினத்தந்தி
அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் முதல் வாரத்தில் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். "இட்லி கடை"டவ்ன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், பார்த்திபன், அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 1ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது."காந்தாரா சாப்டர் 1" ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் காந்தாரா சாப்டர் 1. இது காந்தா படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்தபடத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 2ந் தேதி வெளியாக உள்ளது. "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" ஜான்வி கபூர், வருண் தவான், ரோஹித் சரப் மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி. இயக்குனர் ஷஷாங்க் கைதன் இந்த படத்தினை ரொமாண்டிக், காமெடி கதைக்களத்தில் உருவாக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் 2ந் தேதி வெளியாக உள்ளது. "மரியா" இயக்குனர் ஹரி கே சுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மரியா. இந்த படத்தில் நடிகை சாய்ஸ்ரீ பிரபாகரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாவெல் நவகீதன், சித்து குமரேசன், மற்றும் விக்னேஷ் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 3ந் தேதி வெளியாக உள்ளது.

மூலக்கதை