‘ஆர்யன்’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

  தினத்தந்தி
‘ஆர்யன்’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

சென்னை, வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில், இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஆர்யன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 05.06 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.In the shadows, the truth finds its light #Aaryan – Teaser drops today at 5.06 PM. In cinemas worldwide from 31st October - in Tamil and Telugu.@TheVishnuVishal @VVStudioz @adamworx @selvaraghavan @ShraddhaSrinath @Maanasa_chou @GhibranVaibodha @dop_harish @Sanlokesh… pic.twitter.com/yw0X5U66jS

மூலக்கதை