"இட்லி கடை" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

  தினத்தந்தி
இட்லி கடை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சென்னை, தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ‘யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலைல், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை