''ஜன நாயகனுடன்'' நேரடி மோதலைத் தவிர்த்த பிரபாஸின் ''தி ராஜா சாப்''

சென்னை,பிரபாஸின் 'தி ராஜா சாப்' படம் ஜனவரி 9 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. மாருதி இயக்கிய காமெடி-ஹாரர் படமான இதன் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் சுவாரசியமாக, எச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி உள்ள 'ஜன நாயகன்'-ம் ஜனவரி 9 அன்றுதான் வெளியாகிறது. இது இருவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜன நாயகனுடன் தமிழில் நேரடி மோதலைத் தவிர்க்க, 'தி ராஜா சாப்' படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் பதிப்பை ஜனவரி 10 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்த 'தி ராஜா சாப்' படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி மற்றும் ஜரினா வஹாப் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார்.
மூலக்கதை
