'பள்ளிச்சட்டம்பி' படம் பற்றி மனம் திறந்த கயாடு லோஹர்

சென்னை,டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் கயாடு லோஹர். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தமிழ் திரை உலகின் பார்வை கயாடு லோஹர் பக்கம் திரும்பியது. இதயம் முரளி படத்தில் அதர்வா ஜோடியாகவும், இம்மார்ட்டல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். சிம்புவின் எஸ்டிஆர் 49 படத்திலும் அவர் நடிக்கிரார். மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் 'பள்ளிச்சட்டம்பி' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பள்ளிச்சட்டம்பி' படம் பற்றிய சில விவரங்களை கயாடு பகிர்ந்துள்ளார்.'பள்ளிச்சட்டம்பி' "ஒரு அழகான படம்" என்றும், படத்தில் அவரது "தோற்றம் அற்புதமாக இருக்கிறது" என்றும், அது அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கயாடு பகிர்ந்து கொண்டார்.
மூலக்கதை
