கரூர் சம்பவம் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நடிகை சனம் ஷெட்டி க்கு அனுமதி மறுப்பு

  தினத்தந்தி
கரூர் சம்பவம்  பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நடிகை சனம் ஷெட்டி க்கு அனுமதி மறுப்பு

கரூர்,கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் காயமடைந்தவர்களை சந்திக்க வந்த நடிகை சனம் ஷெட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், '' பிரசாரத்திற்கு இப்படி ஒரு நெரிசலான இடத்தில் அனுமதி கொடுத்தது தவறு. இந்த சம்பவத்தை த.வெ.க.வினர் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, வரும் காலத்தில் செயல்பட வேண்டும், என்றார். ஏற்கனவே சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது அவர்களை சனம் ஷெட்டி சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை