''ஜூடோபியா 2'' - வெளியானது கடைசி டிரெய்லர்

  தினத்தந்தி
ஜூடோபியா 2  வெளியானது கடைசி டிரெய்லர்

சென்னை,டிஸ்னி நிறுவனம் தனது அடுத்த அனிமேஷன் படமான ''ஜூடோபியா 2''-ன் இறுதி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான ஜூடோபியாவின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்தப் படம் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. போலீஸ் காமெடி படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது 'ஜூடோபியா 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர். ஜூடோபியா (2016) படத்திற்காக 'ட்ரை எவ்ரிதிங்' என்ற பாடலை பாடிய ஷகிரா, இந்தப் படத்திற்காக 'ஜூ' என்ற தலைப்பில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப் பாடலை ஷகிரா, எட் ஷீரன் மற்றும் பிளேக் ஸ்லாட்கின் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மூலக்கதை