விஜய் மீது விமர்சனம்: "முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்"- ஓவியாவுக்கு கடும் எதிர்ப்பு

  தினத்தந்தி
விஜய் மீது விமர்சனம்: முதலில் உன்னை கைது செய்ய வேண்டும் ஓவியாவுக்கு கடும் எதிர்ப்பு

சென்னை, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து கருத்து வெளியிட்ட நடிகை ஓவியா, நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு பதிவுகள் சரமாரியாக பதிவிடப்பட்டன. இதையடுத்து தனது பதிவை ஓவியா நீக்கினார். மேலும் தனது பதிவுக்கு எதிராக வந்த விமர்சனங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஓவியா பதிவிட்டுள்ளார். நீ குடிச்சிட்டு காரை ஏற்றி பல பேரை கொலை செய்ய பாத்தியே உன்னை ஏன் கைது செய்யகூடாது? இதற்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்த போது நீ ஏதும் பேசினாயா? முதலில் உன்னை கைது செய்ய வேண்டும் என்பது உள்பட ஓவியாவுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

மூலக்கதை