வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரம் என்ன?

  தினத்தந்தி
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னை,தங்கம் விலை கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினமும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று (29-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 29.09.2025 ஒரு சவரன் ரூ.85,600 (இன்று) 27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400 25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080 24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800

மூலக்கதை