ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு- பிசிசிஐ அறிவிப்பு

மும்பை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை வென்றது. பாகிஸ்தானை மட்டும் இந்திய அணி 3 தடவை வீழ்த்தி முத்திரை பதித்தது. இந்திய அணிக்கு 9-வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.இந்த நிலையில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு தொகை அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய அணியின் வெற்றி மிகவும் சிறப்பானது. ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு வழங்கப்படுகிறது. பரிசு தொகை வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும். தோல்வியை சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
