சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

மதுரை, தெற்கு ரெயில்வே சார்பில், தீபாவளி பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06151) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி, அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி மற்றும் 20-ந்தேதிகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06152) கன்னியாகுமரியில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் 7,14 மற்றும் 21-ந் தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும், நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மூலக்கதை
