புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற தபாங் டெல்லி

சென்னை, 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் இரு அணிகளும் வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த மோதலில் அபாரமாக செயல்பட்ட தபாங் டெல்லி அணி 38-37 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.
மூலக்கதை
