ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

டாக்கா, ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கிறது. இந்த தொடரின் டி20 ஆட்டங்கள் ஷார்ஜாவிலும், ஒருநாள் போட்டிகள் அபுதாபியிலும் நடக்கின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக லிட்டன் தாஸ் அணியில் இடம் பெறவில்லை. ஜேக்கர் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணி விவரம்: ஜேக்கர் அலி (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமான், சைப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், முகமது சைபுதீன், சவுமியா சர்க்கார்.
மூலக்கதை
