கவுண்டி கிரிக்கெட்: 166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சாஹர்

  தினத்தந்தி
கவுண்டி கிரிக்கெட்: 166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சாஹர்

லண்டன், இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே மற்றும் ஹாம்ப்ஷைர் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சர்ரே 147 ரன்களும், ஹாம்ப்ஷைர் 248 ரன்களும் எடுத்தனர். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் சர்ரே அணி 281 ரன்களில் ஆல்-அவுட்டானது. அதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சர்ரே அணி, ஹாம்ப்ஷைர் அணியின் பந்து வீச்சத்தாக்குப் பிடிக்க முடியாமல் 160 ரன்களில் சுருண்டது. இதனால், சர்ரே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்ரே அணி வீரர் ராகுல் சஹார் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். கவுன்டி கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமான ராகுல் சஹார். தன்னுடைய முதல் போட்டியிலேயே 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக, சர்ரே அணிக்காக விளையாடிய வில்லியன் முல்டே 1859 ஆம் ஆண்டு ஹாம்ப்ஷைருக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ராகுல் சஹார் முடியடித்துள்ளார்.

மூலக்கதை