பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி... ஆட்டநாயகன் திலக் வர்மா கூறியது என்ன..?

  தினத்தந்தி
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி... ஆட்டநாயகன் திலக் வர்மா கூறியது என்ன..?

துபாய், ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, போட்டியில் அழுத்தம் இருந்தது. பாகிஸ்தான் நன்றாக பந்து வீசினர். அவர்கள் வேகத்தை கலக்கி போட்டார்கள். நான் நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு அமைதியாக விளையாட முயற்சித்தேன். சாம்சன் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அழுத்தத்தின் கீழ் துபே பேட்டிங் செய்த விதம் உதவிகரமாக இருந்தது. அது நம்முடைய நாட்டுக்கு முக்கியமானதாகவும் அமைந்தது. நாங்கள் அனைத்து இடங்களிலும் விளையாடத் தயாராக இருக்கிறோம். நீங்கள் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் வகையில் வளைவுத்தன்மையுடன் இருக்க வேண்டும். என்னுடைய ஆட்டத்திற்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். பிட்ச் ஸ்லோவாக இருக்கும் போது எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி கௌதம் கம்பீர் சாரிடம் பேசியுள்ளேன். அந்த சூழ்நிலைகளில் அசத்துவதற்காக நான் கடினமாகவும் உழைத்துள்ளேன். இது என்னுடைய வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்களில் ஒன்று. இது அனைத்து இந்தியர்களுக்குமானது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை