சீனா ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா) - ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினா உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மூலக்கதை
