ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ்

  தினத்தந்தி
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ்

அகமதாபாத், 11-வது ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 1 நிமிடம் 48.47 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் கடந்த 16 ஆண்டுகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். சீனாவின் சூ ஹைபோ (1 நிமிடம் 46.83 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார். 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தத்திலும் ஸ்ரீஹரி நடராஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மூலக்கதை