இந்தியாவின் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி அதிகரிக்கிறது

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷிய கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து, பிற நாடுகளுக்கு பெட்ரோல், டீசலாக ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த ஆண்டு, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பீப்பாய்கள் முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய்கள் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதே சமயத்தில், உள்நாட்டில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரித்து இருப்பதால், உள்நாட்டில் பெட்ரோலின் தேவை குறைந்துள்ளது. எனவே, உபரி ஆகும் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வது நடப்பாண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி, நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்களை எட்டும் என்று கருதப்படுகிறது.
மூலக்கதை
