வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்பு: வெளியான அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை நாட்டு தொழிலாளிகளுக்கான காப்பீடு தொகை குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை நாட்டு தொழிலாளிகளுக்கான காப்பீடு இழப்பீட்டு தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆணையாளர் கோசல விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை நாட்டு தொழிலாளிகளுக்கு 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும். இந்நிலையில், தற்போது ரூ. 1.4 மில்லியனைச் சேர்த்து ரூ.2 மில்லியன் இழப்பீடாக வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல்வேறு பணிகளை செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மூலக்கதை
