ஜிஎஸ்டி வரி குறைப்பு - கார் விற்பனையில் புதிய சாதனை

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கடந்த 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், கார்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 22 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் மாருதி சுசுகி நிறுவனம், 32,000 கார்கள் விற்பனை செய்துள்ளது. அதேபோல, ஹூண்டாய் நிறுவனம் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
