தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்வு... சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது

  தினத்தந்தி
தங்கம் விலை இன்று 2வது முறையாக உயர்வு... சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது

சென்னை,சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 500-ம், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்திற்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.149-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.50-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 (மாலை) 23.09.2025 ஒரு சவரன் ரூ.84,000 (காலை) 22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440 (நேற்று) 21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320 20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320 19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840 18.09.2025 ஒரு சவரன் ரூ.81,760

மூலக்கதை