இலங்கை ஜனாதிபதி அநுரகுமார ஜப்பான் சுற்றுப்பயணம்: நிகழ்ச்சி நிரல் விவரங்கள் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார ஜப்பான் சுற்றுப்பயணம்: நிகழ்ச்சி நிரல் விவரங்கள்  லங்காசிறி நியூஸ்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு முறை பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார்.ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரும் செப்டம்பர் 27ம் திகதி ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 4 நாட்கள் சுற்றுப்பயணமானது செப்டம்பர் 30ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு காரியங்கள் குறித்து ஜப்பான் அரசுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் ஜப்பானின் முக்கிய வணிக மற்றும் முதலீட்டு மையங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சுற்றுப்பயணத்தின் போது, “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்வில் அநுரகுமார திஸாநாயக்க சிறப்பு விருந்தினராக கல்ந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஜப்பானில் வசிக்கும் இலங்கை நாட்டு சமூகத்தினரிடையே அநுரகுமார உரையாற்றவுள்ளார். இது சர்வதேச பார்வையாளர்களுக்கு முன்பாக இலங்கையின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் பொருளாதார ஆற்றலை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார-வுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் ஜப்பான் செல்ல உள்ளனர்.  இந்த சுற்றுப்பயணமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்பு மற்றும் ஒத்துழைப்பு பிணைப்புகளை மேலும் பலப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை