கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர்

தினமலர்  தினமலர்
கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் ஆவேசம்' என்கிற படம் வெளியானது. ஒரு கேங்ஸ்டர் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 100 கோடி வசூலையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரோமாஞ்சம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரது இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் என யாருமே இல்லை. அதேபோல இந்த ஆவேசம் படத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கும் பஹத் பாசில் எதனால் கேங்ஸ்டர் ஆனார் என்கிற பிளாஷ்பேக் எதுவும் சொல்லப்படவில்லை.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ஜித்து மாதவன், “இந்த கதையில் மூன்று கல்லூரி மாணவர்களின் கண்ணோட்டத்தில் தான் ரங்கா என்கிற தாதா ரசிகர்களுக்கு காட்டப்படுகிறார். அதனால் ரங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது பிளாஷ்பேக் எதுவும் இந்த கதைக்கு தேவைப்படவில்லை. அப்படி வைத்தாலும் அது வழக்கமான கிளிஷேவாகத் தான் இருக்கும் என்பதால் தவிர்த்து விட்டோம்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ஹாரர் காமெடியாக உருவாகி இருந்த இவரது முதல் படமான ரோமாஞ்சம் படத்தில் கூட பேய்க்கான பிளாஷ்பேக் ஸ்டோரி என எதையும் இவர் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை