அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப்

தினமலர்  தினமலர்
அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா  பிரேம் ஜாக்கப்

பிரபல மலையாள நடிகையான சுவாசிகா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாள மொழியில் பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை நடிகரான பிரேம் ஜாக்கப் என்பவரை காதலித்து வந்தார். பிரேம் ஜாக்கப் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார். சுவாசிகா - பிரேம் ஜாக்கப் ஜோடிக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து இருவரும் தற்போது தங்களது ஹனிமூனை அந்தமானுக்கு சென்று கொண்டாடி உள்ளனர்.

மூலக்கதை