நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர்

தினமலர்  தினமலர்
நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர்

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் தொலைக்காட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட கதை பஞ்சம் காரணமாக பிறமொழிகளிலிருந்து கூட சீரியல்களை மொழி பெயர்ப்பு செய்தும் ரீமேக் செய்தும் வந்தனர். தற்போது தமிழ் சின்னத்திரையில் மீண்டும் தரமான கதைகள் வரதொடங்கியுள்ள நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழிகளில் அந்த தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கயல், எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது விஜய் டிவி தொடரான சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்துள்ளது. இந்த தொடருக்கு கிடைக்கும் வரவேற்பால், 'குண்டே நிண்டா குண்டே கண்டலு' என்ற பெயரில் தெலுங்கிலும் 'செம்பன்னீர் பூவு' என்கிற பெயரில் மலையாளத்திலும் 'சாதி மானசா' என்கிற பெயரில் மராத்தியிலும் 'உட்னே கி ஆஷா' என்கிற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒளிபரப்பாகும் அனைத்து மொழிகளிலுமே டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை