அமெரிக்காவில் விபத்து; இந்திய மாணவர் பலி

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் விபத்து; இந்திய மாணவர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இன்டியானாபோலிஸ் பகுதியில் இன்டியானா புர்டே என்ற பல்கலை உள்ளது. இங்கு தெலுங்கானா மாநிலம் காசிபேட் பகுதியை சேர்ந்த மாணவர் வெங்கடரமணா பிட்டாலா, 27, பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏரியில் சமீபத்தில் நீர்சறுக்கு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்து, பிட்டாலா இயக்கினார்.

அப்போது தெற்கு புளோரிடா பகுதியை சேர்ந்த, 14 வயதான சிறுவன் ஓட்டிய மற்றொரு நீர் சறுக்கு ஸ்கூட்டர், பிட்டாலாவின் ஸ்கூட்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இந்திய மாணவர் பிட்டாலா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவன் காயம் இன்றி தப்பினான். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் சிறுவன் இதுவரை கைது செய்யப்படவில்லை. உயிரிழந்த பிட்டாலாவின் உடலை இந்தியா கொண்டு வர நிதி திரட்டப்பட்டு வருகிறது.

வாஷிங்டன் : அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இன்டியானாபோலிஸ் பகுதியில் இன்டியானா புர்டே என்ற பல்கலை உள்ளது. இங்கு தெலுங்கானா மாநிலம் காசிபேட் பகுதியை சேர்ந்த மாணவர் வெங்கடரமணா

மூலக்கதை