19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் 2023 செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஹாங்சோ உள்ளிட்ட 5 பகுதிகளில் உள்ள 54 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ********************** ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டி ********************************** மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து 634 வீரர், வீராங்கனைகள் 38 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக அமைந்துள்ளதால் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. *********************************** செஸ், இ-ஸ்போர்ட்ஸ், கபடி, காம்பவுண்ட் வில்வித்தை, பிரிட்ஜ், கிரிக்கெட், படகு போட்டி, ஸ்குவாஷ் ஆகிய 8 விளையாட்டுகளில் வலுவான போட்டியாளர்களாக இருப்பதால் இவற்றில் இந்தியா தங்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்தியா கணிசமான பதக்கங்களை கைப்பற்றக்கூடும். **************************** பதக்கங்களை குவிக்கத்தொடங்கிய இந்திய வீரர்கள் ********************** தடகளத்தை பொறுத்தவரையில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து க்கொள்ளக்கூடும். 100 மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி, நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர், டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ், 800 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார், குண்டு எறிதலில் தஜிந்தர் பால் சிங், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் ஆகியோர் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுடன் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளும் முத்திரை பதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டிகள் தொடங்கிய 2-வது நாளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவிக்கத்தொடங்கிவிட்டனர். அதன்படி 3 வெள்ளிப்பதக்கமும், 2 வெண்கலமும் வென்றனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் 2023 செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஹாங்சோ உள்ளிட்ட 5 பகுதிகளில் உள்ள 54 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டி
மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து 634 வீரர், வீராங்கனைகள் 38 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக அமைந்துள்ளதால் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
செஸ், இ-ஸ்போர்ட்ஸ், கபடி, காம்பவுண்ட் வில்வித்தை, பிரிட்ஜ், கிரிக்கெட், படகு போட்டி, ஸ்குவாஷ் ஆகிய 8 விளையாட்டுகளில் வலுவான போட்டியாளர்களாக இருப்பதால் இவற்றில் இந்தியா தங்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்தியா கணிசமான பதக்கங்களை கைப்பற்றக்கூடும்.
பதக்கங்களை குவிக்கத்தொடங்கிய இந்திய வீரர்கள்
தடகளத்தை பொறுத்தவரையில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து க்கொள்ளக்கூடும். 100 மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி, நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர், டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ், 800 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார், குண்டு எறிதலில் தஜிந்தர் பால் சிங், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் ஆகியோர் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுடன் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளும் முத்திரை பதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டிகள் தொடங்கிய 2-வது நாளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவிக்கத்தொடங்கிவிட்டனர். அதன்படி 3 வெள்ளிப்பதக்கமும், 2 வெண்கலமும் வென்றனர்.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
