பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது (56). தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பொறியியல் படித்தவர். மனைவி பாக்கியலட்சுமி மற்றும் 2 பிள்ளைகள். சினிமா மீதுள்ள மோகத்தால் சென்னைக்கு வந்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2014-ம் ஆண்டு 'புலிவால்' , 2008-ம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.

தற்போது,தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில், இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இன்று வெள்ளிக்கிழமை (08/092023) காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, 'எதிர் நீச்சல்' தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது (58). தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பொறியியல் படித்தவர். மனைவி பாக்கியலட்சுமி மற்றும் 2 பிள்ளைகள். சினிமா மீதுள்ள மோகத்தால் சென்னைக்கு வந்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2014-ம் ஆண்டு 'புலிவால்' , 2008-ம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார். 

தற்போது,தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில், இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இன்று வெள்ளிக்கிழமை (08/092023) காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, 'எதிர் நீச்சல்' தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை