இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா
பெய்ஜிங், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் அளவிற்கு அதே வரியை, வரி விதிக்கும் நாடுகள் மீதும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதன்படி, கடந்த 9 ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இந்தியா மீதும் 26 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார்.வல்லரசு நாடான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. பல்வேறு நாடுகளும் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக 90 நாட்களுக்கு வரி விதிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார். எனினும், சீனா மீது மட்டும் விதிக்கப்பட்ட வரி விதிப்பை நிறுத்தி வைக்கவில்லை. மாறாக வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளார். சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை கடந்த 19 ஆம் தேதி அமரிக்கா வெளியிட்டது. அமெரிக்கா தற்போது ஏகத்திற்கும் வரியை விதித்து இருக்க கூடிய நிலையில், இந்தியாவின் பக்கம் சீனா தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. அதாவது, இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார் எனவும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை போக்கும் வகையில், சீன சந்தைக்குள் இந்திய பொருட்களை இறக்கி இந்திய தொழில்களுக்கு உதவ தயாராக உள்ளதையும் இந்தியாவுக்கான சீனா தூதர் தெரிவித்துள்ளார்.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
