ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி

தினமலர்  தினமலர்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி

புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதில் இருந்து, அதிக வசூலை ஈட்டிய இரண்டாவது மாதமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, அதிகபட்சமாக, கடந்த ஏப்ரலில் 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலானது. அதற்கு பிறகு, அதிக வசூலை குவித்த இரண்டாவது மாதம், நடப்பாண்டு ஜூலை ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வசூல் 1.16 கோடி ரூபாயாக இருந்தது.ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை, ஆறு முறை வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஜூலை மாதத்தில், சரக்கு இறக்குமதியின் வருவாய் 48 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும் சேவைகளின் இறக்குமதி உள்ளிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட, 22 சதவீதம் அதிகமாக உள்ளது.பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூலக்கதை