தோல் பொருட்கள் ஏற்றுமதிதேவை அதிகரிப்பால் உயரும்

தினமலர்  தினமலர்
தோல் பொருட்கள் ஏற்றுமதிதேவை அதிகரிப்பால் உயரும்

புதுடில்லி–நாட்டின் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 47 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயரும் என, தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.


மேலும், உலக சந்தையில் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் கவுன்சில் தெரிவித்து உள்ளது.இது குறித்து, ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் சஞ்சய் லேகா கூறியதாவது:உலக சந்தைகளில் தேவைகள் அதிகரித்து வருவது மற்றும் அரசின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர் அதாவது, 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.


வரும் 2025 – 26 நிதிஆண்டில், ஏற்றுமதி 79 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என உறுதியாக நம்புகிறோம். கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 32.5 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 78.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 44.6 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மூலக்கதை