பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டும்

தினமலர்  தினமலர்
பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டும்

புதுடில்லி–நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என, பொருளாதார நிபுணர்கள் கருதுவதாக, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் கணிப்பு தெரிவித்துள்ளது.

சில்லரை விலை
மேலும் தெரிவித்துஉள்ளதாவது: கடந்த 4ம் தேதியிலிருந்து, 8ம் தேதி வரை நடைபெற்ற கணிப்பில், 42 பொருளாதார நிபுணர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.அதில், ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கை மீறி, 7 சதவீதத்துக்கும் அதிக மாக அதாவது 7.03 சதவீதமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்து உள்ளனர்.உணவுப் பொருட்கள் விலை, ஏறக்குறைய இரண்டு ஆண்டு களில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

கட்டுப்பாடு
அரசாங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைத்து, உணவு ஏற்றுமதி மீதான கட்டுப் பாடுகளை விதித்த பின்னர், ஒட்டு மொத்த பணவீக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், கடந்த மாதம் வெப்பநிலை அதிகரித்ததால், காய்கறிகளின் விலை உயர்ந்ததை எடுத்துக்காட்டி, நடுத்தர கால அளவில், நிச்சயமற்ற நிலை நீடிப்பதாக தெரிவித்துஉள்ளனர். மேலும், வட மாநிலங்களில் வறட்சி நிலவுவதால், அரசு கோதுமை உற்பத்தி மதிப்பீடுகளை அரசு குறைத்திருப்பதையும் மேற்கோள் காட்டுகின்றனர்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.


மூலக்கதை