வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ.,

தினமலர்  தினமலர்
வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ.,



புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருகிறது. மாநிலங்களின் சராசரி வருவாய், கடந்த 2001–02 நிதியாண்டில் 18 ஆயிரத்து, 118 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011–12ல் 68 ஆயிரத்து, 845 கோடி ரூபாயாக அதிகரித்தது. பின், 2021–22ல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.மேலும், வருமான சமத்துவமின்மையும் ஓரளவு குறைந்துள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, வித்தியாசம் 2011 – 12 நிதியாண்டில் 76 சதவீதமாக இருந்தது, 2021- – 22ல் 67 சதவீதமாக குறைந்து உள்ளது. சிக்கிம் மற்றும் கோவாவில் சராசரி தனிநபர் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது.பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தனிநபர் வருமானத்தில் தொடர்ந்து கீழ்நிலையில் இருந்து வருகிறது.இவ்வாறு எஸ்.பி.ஐ., பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை