எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு



புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் மிக வேகமாக வளரும் விமான போக்குவரத்து சந்தையான இந்தியாவில், விமான கட்டணங்கள், கடந்த நான்கு மாதங்களில், மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளன.நடப்பு ஆண்டில், கடந்த மார்ச் மாதத்தில் முதன் முறையாக விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன் பின், கடந்த மே மாதத்தில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரித்து உள்ளது. விமான போக்குவரத்துக்கான முக்கியமான 20 வழிகளில், இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், எரிபொருள் விலை அதிகரிப்பாகும். டில்லியில் விமான எரிபொருள் விலை, கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. விமானத்துக்கான செலவினங்களில், கிட்டத்தட்ட 45 – 50 சதவீதம் எரிபொருளுக்கு சென்றுவிடுகிறது.இந்த விலை உயர்வு, நுகர்வோரையும் விமான நிறுவனங்களையும் எந்த அளவுக்கு பாதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள், துறை சார்ந்த நிபுணர்கள்.

மூலக்கதை