மகளிர் ஒருநாள் தரவரிசை ஜூலன் பின்தங்கினார்

தினகரன்  தினகரன்
மகளிர் ஒருநாள் தரவரிசை ஜூலன் பின்தங்கினார்

துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் நேற்று மாற்றங்களை கண்டது. அதன்படி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்ற மிதாலி ராஜ் பெயர் பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு முதல் இடத்தில் இருந்த மிதாலி போட்டிகளில் பங்கேற்காததால் கடைசியாக 7வது இடத்தில் இருந்தார். இப்போது முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை ஸ்மிரித மந்தானா. அவர் 8வது இடத்தில் தொடர்கிறார். புதுக் கேப்டன் ஹர்மன்பிரீத் 13வது இடத்தில் உள்ளார். முதல், 3வது இடங்களில் ஆஸி வீராங்கனைகள் அலிஷா, பெத் முனி ஆகியோரும், 2வது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை நடாலியாவும்  இருக்கின்றனர்.அதேபோல் பந்து வீச்சு தரவரிசையில் மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஒரு இடம் பின் தங்கி 6வது இடத்தில் இருக்கிறார். ஷோபி(இங்கிலாந்து), ஷப்னிம்(தென் ஆப்ரிக்கா), ஜெஸ்(ஆஸி) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.மற்ற இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட் 12, தீப்தி சர்மா 18வது இடங்களிலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களை பொறுத்தவரை நடாலியா(இங்கி), எல்லிஸ்(ஆஸி), மரிஸன்னே(தெ.ஆ) ஆகியோர் முதல் 3 இடங்களை கைப்பற்றி உள்ளனர். இந்திய  வீராங்கனை தீப்தி சர்மா 7வது இடத்தில் தொடர்கிறார். உலக கோப்பைக்கு பிறகு எந்த ஆட்டத்திலும் பங்கேற்காத ஜூலன் ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் ஒரு இடம் பின்தங்கி 11வது இடத்தில் உள்ளார்.

மூலக்கதை