மே மாதத்தில் ஏற்றுமதி20.55 சதவீதம் உயர்வு

தினமலர்  தினமலர்
மே மாதத்தில் ஏற்றுமதி20.55 சதவீதம் உயர்வு

புதுடில்லி,–நாட்டின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் 20.55 சதவீதம் உயர்ந்து, 3.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில், ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதியை பொறுத்தவரை 62.83 சதவீதம் உயர்ந்து, 4.93 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1.89 லட்சம் கோடி ரூபாயாக, கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளது.

இது இதுவரை இல்லாத அளவாகும்.கடந்த ஆண்டு மே மாதத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, கிட்டத்தட்ட 51 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில், ஏற்றுமதி 25 சதவீதம் உயர்ந்து, 6.14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என வர்த்தக அமைச்சகம்தெரிவித்துள்ளது.

மூலக்கதை