ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் நாளை ஆலோசனை

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் நாளை ஆலோசனை

மும்பை–ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு, நாளை சந்திக்க உள்ளது.

இக்கூட்டத்தின்போது, வரி விகிதங்களில் சாத்தியமான மாற்றங்கள்செய்வது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.மாநிலங்களின் வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு ஒன்று, கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. 7 பேர் கொண்ட இந்த குழுவில், மாநில அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முன் இந்த குழுவினர், கடந்த ஆண்டு நவம்பரில் கூடினர். தற்போது ஜி.எஸ்.டி., நான்கு அடுக்குகளில் விதிக்கப்படுகிறது. குறைந்த வரி விகிதம் 5 சதவீதமாகவும்; அதிகபட்சமாக 28 சதவீதமும், இடைநிலையாக 12 மற்றும் 18 சதவீதமும் உள்ளன.இந்த விகிதத்தில் எத்தகைய மாறுதல்களை மேற்கொள்ளலாம் என அமைச்சரவை குழு, ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும்.அண்மையில் வரிவிகிதங்கள் மாற்றி அமைக்கும் முயற்சியில் கவுன்சில் இருப்பதாக செய்திகள் வந்தபோது, பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என, நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை