ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி

தினமலர்  தினமலர்
ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி


புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், அப்படியே முடங்கி கிடக்கிறது.ரஷ்ய அதிபர் புடின், அந்நாட்டிலிருந்து டாலரை அனுப்புவதை கட்டுப்படுத்தியதை அடுத்து, இந்தியாவுக்கு வரவேண்டிய தொகை வராமல் முடங்கி உள்ளது.


இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், கிட்டத்தட்ட 42 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை, ரஷ்யாவில் இருக்கும் நான்கு வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகளை பெற முதலீடு செய்துள்ளது.இதில், ரஷ்யாவில் உள்ள ‘வான்கோர்நெப்ட்’ எண்ணெய் மற்றும் எரிவாயு வயலின் 49.9 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதும் அடக்கம்.இதுவரை முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லாபத்திலிருந்து ஈவுத் தொகை ஒழுங்காக வந்து கொண்டிருந்தது.



சில நிறுவனங்களிலிருந்து காலாண்டுக்கு ஒருமுறையும், சிலவற்றிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறையும் வந்துகொண்டிருந்தது.ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கவும், நிலைமைகள் எல்லாம் மாறிவிட்டன. ரஷ்யா அந்நாட்டிலிருந்து டாலர் வெளியே செல்வதை கட்டுப்படுத்திவிட்டது. இதனால், இந்திய நிறுவனங்களுக்கு ஈவுத் தொகை வருவது தடைபட்டு உள்ளது.இருப்பினும், இந்திய நிறுவனங்கள், நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளன.

மூலக்கதை