அதானி வசம் ‘ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்’

தினமலர்  தினமலர்
அதானி வசம் ‘ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்’


புதுடில்லி: பெங்களூரை சேர்ந்த, ‘ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது, அதானி குழுமம்.ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், விவசாய தேவைகளுக்கு பயன்படும் வகையிலான, ‘ட்ரோன்’ எனும் ஆளில்லா சிறு விமானங்களை தயாரித்து வருகிறது.

குறிப்பாக, பயிர் பாதுகாப்பு, அறுவடை கண்காணிப்பு என பல பணிகளில் பயன்படுத்த ஏதுவான, ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை, ‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அதானி டிபன்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜிஸ்’ வாங்குகிறது.இதன் வாயிலாக, அதானி நிறுவனம், உள்நாட்டு விவசாய துறைக்கு தேவையான தீர்வுகளை வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை