சிங்கப்பூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா

சிங்கப்பூரில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.

தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு 1859ல் கட்டப்பட்ட பழமைவாய்ந்த தண்டாயுதபாணி கோயில் எனப்படும் முருகன் கோயில் உள்ளது. சிங்கப்பூர் அரசு இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக அறிவித்துள்ளது. இங்கு நடக்கும் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது.

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தின் போது கூடியிருந்த பக்தர்கள், 'அரோகரா' என முழங்கினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவது பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது ஆகிய பணிகளில் 1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்த விழாவில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் கலாசாரத் துறை அமைச்சர் எட்வின் டோங் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிங்கப்பூரில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு 1859ல் கட்டப்பட்ட பழமைவாய்ந்த

மூலக்கதை