மலையாள 'மின்னல் முரளி' ரீமேக்கா 'வீரன்', இன்று மாலை அப்டேட்

தினமலர்  தினமலர்
மலையாள மின்னல் முரளி ரீமேக்கா வீரன், இன்று மாலை அப்டேட்

பஷில் ஜோசப் இயக்கத்தில், டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மின்னல் முரளி'.

மின்னல் தாக்கியதால் கிடைத்த சக்தியை வைத்து படத்தின் நாயகனும், வில்லனும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. அந்தப் படத்தைப் போலவே மின்னல் தாக்கியதால் கிடைக்கும் சக்தியை வைத்து நாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் 'வீரன்' படத்தின் கதை என்று மட்டும் படக்குழுவினர் இதுவரை தெரிவித்து வந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா, வினய், ஆதிரா ராஜ் மற்றும் பலர் நடிப்பில், எஆர்கே சரவண் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் வெளிவர உள்ள படம்தான் 'வீரன்'.

'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்காகத்தான் 'வீரன்' படத்தை எடுத்துள்ளார்கள் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வந்தது. அதற்கு அப்டேட் கொடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் அறிவிக்க உள்ளார்களாம்.

மூலக்கதை