சீனாவில் துவங்குது அடுத்த கொரோனா அலை: வாரத்துக்கு 6.50 கோடி பேர் பாதிக்கப்படலாம்

தினமலர்  தினமலர்
சீனாவில் துவங்குது அடுத்த கொரோனா அலை: வாரத்துக்கு 6.50 கோடி பேர் பாதிக்கப்படலாம்

சீனாவில், புதிய உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதாகவும், தொற்று பரவல் அடுத்த மாதம் தீவிரம் அடைந்து, வாரத்திற்கு 6.50 கோடி பேர் பாதிக்கப்பட கூடும் என, அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின், தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. அதன் பின், 'ஜீரோ கோவிட்' என்ற திட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. அதன்படி, கொரோனா பரவலை முற்றிலுமா ஒழிக்கும் நோக்கத்துடன் தொற்று தடுப்பு நெறிமுறைகள் மிக கடுமையாக பின்பற்றப்பட்டன.

இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்கள் சாலையில் இறங்கி போராட துவங்கியதை அடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு கைவிடப்பட்டன. அதன் பின், தொற்று பரவல் 85 சதவீதத்தை தாண்டியது.

தற்போது சீனாவில், ஒமைக்ரான் வகை உருமாறிய வைரசில், 'எக்ஸ்பிபி.1.5 மற்றும் எக்ஸ்பிபி.1.16' என்ற இரண்டு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த புதிய வகை தொற்று வேகமாக பரவத்துவங்கி உள்ளது. அடுத்த மாதம் தொற்று பரவல் தீவிரமடையும் என, கூறப்படுகிறது.

இந்த புதிய அலையில், வாரத்துக்கு 6.50 கோடி பேர் வரை பாதிக்கப்பட கூடும் என, அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், உருமாறிய எக்ஸ்பிபி ஓமைக்ரான் வகை வைரஸ்களை கட்டுப்படுத்த இரண்டு புதிய தடுப்பூசிகளுக்கு ஆரம்பக்கட்ட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் 4 - 5 தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட இருப்பதாகவும், சீனாவின் தொற்று நோய் நிபுணர் ஸாங் நான்ஷான் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவில், புதிய உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதாகவும், தொற்று பரவல் அடுத்த மாதம் தீவிரம் அடைந்து, வாரத்திற்கு 6.50 கோடி பேர் பாதிக்கப்பட கூடும் என, அமெரிக்க நாளிதழ் செய்தி

மூலக்கதை