60 வயதில் 2-வது திருமணம் செய்த கில்லி நடிகர்

தினமலர்  தினமலர்
60 வயதில் 2வது திருமணம் செய்த கில்லி நடிகர்

சென்னை: கில்லி படத்தில் நடித்திருக்கும் நடிகர் தன்னுடைய 60-வயதில் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கில்லி படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி . இவர் இந்தி,தெலுங்கு, தமிழ், கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த 1995-ல் ட்ரோஹ்கால் படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

இவரின் மனைவி ரூபாலி. இவர் அசாமை சேர்ந்தவர். இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி, தொழிலதிபரான ரூபாலி பருவா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். ரூபாலி பருவா முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளாவார்.

இந்த புதிய ஜோடி நண்பர்கள் முன்னிலையில் கோல்கட்டாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர்களது திருமண போட்டோக்கள் சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது.இருப்பினும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி பெயர் ராஜோஷி வித்யார்த்தி. இவர் 1993-ல் டைம்ஸ் எப்.எம் என்ற எப்.எம். ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலு ம் நடித்துள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி ராஜோஷி வித்யார்த்தியின் தம்பதிக்கு பிறந்தவர் ஆர்த் வித்யார்த்தி. இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறதுர். 23 வயதான ஆர்த் வித்யார்த்தி தந்தையின் இரண்டாவது திருமணத்திற்கு ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை