அமெரிக்க தலைமை தளபதியை சந்தித்தார் அஜித் தோவல்: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி

தினகரன்  தினகரன்
அமெரிக்க தலைமை தளபதியை சந்தித்தார் அஜித் தோவல்: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லேவை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்து ஆலோசித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மார்க் மில்லேவை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து  டிவிட்டரில், ``அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை  சந்தித்தார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது,’’ என்று கூறியுள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை இயக்குர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன், நாசா நிர்வாகி பில் நெல்சன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மூலக்கதை