ஆஸ்கர் விருது பட்டியலில் ஆர்ஆர்ஆர்: 2 டாக்குமெண்டரி படங்களும் தேர்வு

  தினகரன்
ஆஸ்கர் விருது பட்டியலில் ஆர்ஆர்ஆர்: 2 டாக்குமெண்டரி படங்களும் தேர்வு

நியூயார்க்: உலகின் சிறந்த திரைப்பட விழாவாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பல இந்திய திரைப்படங்கள் பொது பிரிவில் போட்டியிட்டது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது இறுதி தேர்வு பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் சமீபத்தில் கோல்டன் குளோப் விருது பெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ என்ற பிரிவில் ேதர்வாகி உள்ளது. அதேபோல சிறந்த டாக்குமெண்டரி திரைப்பட பிரிவில் போட்டியிட்ட ‘ஆல்தட் பிரீத்தஸ்’ என்ற படமும், சிறந்த டாக்குமெண்டரி குறும்பட பிரிவில் போட்டியிட்ட ‘தி எலிபென்ட் விஸ்பரஸ்’ என்ற படமும் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.சிறந்த படங்கள் பிரிவில் ‘தி கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்’, ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, ‘தி பென்ஷெசஸ் ஆஃப் லின்ஷெரின்’, ‘எல்விஸ்’, ‘எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’, ‘தி பெப்லமென்ஸ்’, ‘தார்’, ‘டாப்கன்: மேவ்ரிக்ஸ்’, ‘ட்ரையாங்கிள் ஆஃப் சான்டெஸ்’, ‘வுமன் டாக்கிங்’ படங்கள் இடம்பெற்றுள்ளது. சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் ‘தி பான்சஸ் ஆஃப் லின்ஷெரின்’ படத்தை இயக்கிய மார்ட்டின் மெக்டொனாங்கும், ‘எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தை இயக்கிய டேனியல் க்வான் மற்றும் டேனியர் சச்சினெர்ட்டும், ‘தி பெப்லமென்ஸ்’ படத்தை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும், ‘தார்’ படத்தை இயக்கிய டோட் பீல்டும், ‘ட்ரையாங்கிள் ஆஃப் சான்டெஸ்’ படத்தை இயக்கிய ரூபன் ஆஸ்லன்டும் இடம் பெற்றுள்ளனர்.சிறந்த நடிகைகள் பட்டியலில் கேட் பலன்செட் (தார்), அனா டே ஆர்ம்ஸ் (போலன்ட்), ஆன்ட்ரே ரைஸ்பரோக் (தி லெஸ்லி), மைக்கேல் வில்லியம்ஸ் (தி பெப்லெமென்ஸ்) மைக்கேல் யோஹ் (எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஆஸ்டின் பட்லர் (எல்விஸ்), காலின் பெரரல் ( தின பென்செஸ் ஆஃப் லினிஸ்ரின்), பெரன்டன் பராசர் (தி வாஃல்), பால் மெஸ்கல் (ஆப்டர்சன்), பில் நைக்கி (லிவிங்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் ‘ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர் பிரன்ட்’ (ஜெர்மனி), ‘அர்ஜென்டினா 1985’ (அர்ஜென்டினா), ‘குளோஸ் (பெல்ஜியம்)’, ‘ஈஓ’ (போலந்த்), ‘தி குயட் கேர்ல்’ (ஐயர்லேண்ட்) படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

மூலக்கதை